TNPSC Thervupettagam

73-வது வடகிழக்கு சபை முழு அமர்வுக் கூட்டம்

June 8 , 2026 6 days 81 0
  • வடகிழக்கு சபையின் (NEC) 73-வது முழு அமர்வுக் கூட்டம் ஆனது, 'விக்சித் பாரத் 2047' தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து வடகிழக்கு பிராந்தியத்திற்கான பல்துறை வளர்ச்சி உத்தியை கோடிட்டுக் காட்டியது.
  • முதலீடு, வேளாண்மை, உள்கட்டமைப்பு, சுற்றுலா, விளையாட்டு மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற துறைகளை உள்ளடக்கிய செயல் திட்டங்களை எட்டு உயர்மட்டக் குழுக்கள் சமர்ப்பித்தன.
  • இதற்கு முன்பு வங்கி வசதி இல்லாத சுமார் 6,500 கிராமங்கள் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டன, இதனால் அப்பகுதியில் UPI பயன்பாடு கிட்டத்தட்ட 90% ஆக உயர்ந்துள்ளது.
  • வளர்ந்து வரும் வடகிழக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில் ₹4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு வாக்குறுதிகளைப் பெற்றுள்ளது.
  • வடகிழக்கு சபை (NEC) என்பது 1971 ஆம் ஆண்டு வடகிழக்கு சபைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும், இது வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் (DoNER) கீழ் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்