வடகிழக்கு சபையின் (NEC) 73-வது முழு அமர்வுக் கூட்டம் ஆனது, 'விக்சித் பாரத் 2047' தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து வடகிழக்கு பிராந்தியத்திற்கான பல்துறை வளர்ச்சி உத்தியை கோடிட்டுக் காட்டியது.
முதலீடு, வேளாண்மை, உள்கட்டமைப்பு, சுற்றுலா, விளையாட்டு மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற துறைகளை உள்ளடக்கிய செயல் திட்டங்களை எட்டு உயர்மட்டக் குழுக்கள் சமர்ப்பித்தன.
இதற்கு முன்பு வங்கி வசதி இல்லாத சுமார் 6,500 கிராமங்கள் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டன, இதனால் அப்பகுதியில் UPI பயன்பாடு கிட்டத்தட்ட 90% ஆக உயர்ந்துள்ளது.
வளர்ந்து வரும் வடகிழக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில் ₹4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு வாக்குறுதிகளைப் பெற்றுள்ளது.
வடகிழக்கு சபை (NEC) என்பது 1971 ஆம் ஆண்டு வடகிழக்கு சபைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும், இது வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் (DoNER) கீழ் செயல்படுகிறது.