சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சரும் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத் தலைவருமான டாக்டர். ஹர்ஷ் வர்தன் அவர்கள் 74வது உலக சுகாதார மன்றத்திற்குத் தலைமை தாங்கினார்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரான டாக்டர். டெட்ரோஸ் அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
COVAX வசதியின் கீழ் கோவிட்-19 தடுப்பு மருந்துகளை நியாயமான மற்றும் சமமான முறையில் அணுகச் செய்வதற்கான கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாக வாரியம் கோரியுள்ளது.
இந்த வாரியமானது கோவிட்-19 பெருந்தொற்றினை எதிர்கொள்தல் மற்றும் மனநல ரீதியிலான தயார்நிலை குறித்த அறிக்கையை பரிசீலனை செய்தல் ஆகியவற்றுக்காக வேண்டி 74வது உலக சுகாதார மன்றத்திடம் பரிந்துரை செய்து உள்ளது.