1950 ஆம் ஆண்டில் இந்தியாவும் ஜோர்டானின் ஹாஷிமைட் பேரரசும் அரசுமுறை உறவுகளை ஏற்படுத்தின என்ற ஒரு நிலையில்2025 ஆம் ஆண்டானது அதன் 75 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இருதரப்பு ஒத்துழைப்பு ஆனது அரசியல், பொருளாதாரம், உத்தி சார், பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான துறைகளில் பரவியுள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாவது முழுமையான இருதரப்புப் பயணமாக இந்தியப் பிரதமர் ஜோர்டானுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்துடன் இந்தியா ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்களிப்பவராக உள்ளது என்ற நிலையில்ஜோர்டான் இந்தியாவிற்குப் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷை வழங்குகிறது.
ஜோர்டானில் மேற்கொள்ளப் படும் இந்திய முதலீடுகள், 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மொத்த முதலீடுகளைக் கொண்ட 15க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கியது.