78வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவானது கலப்பின முறை மாதிரியில் நடந்தது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரத்திலிருந்து திரையிடப் பட்டது.
2021 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருதுகள் என்பது இந்த ஆண்டின் முதலாவது பெரிய தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சியாகும்.
இந்த ஆண்டின் திரைப்படப் பிரிவுகளில் 22 பரிந்துரைகளுடன் நெட்ஃபிலிக்ஸ் (42) ஆனது அதிகப் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
திரைப்படப் பிரிவுகளானது "மாங்க்" மற்றும் "தி ட்ரையல் ஆஃப் தி சிகாகோ 7" ஆகிய சிறந்த படம் (நாடகம்) சார்ந்த பரிந்துரைகளையும் "தி கிரவுன்" மற்றும் "ஷிட்ஸ் க்ரீக்" ஆகிய முன்னணிப் படங்களுடன் சேர்த்து தொலைக்காட்சி பிரிவுகளில் 20 படங்களுக்கான பரிந்துரைகளையும் உள்ளடக்கியுள்ளது.
நோமட் லேண்ட் சிறந்த இயக்கப் படம் - நாடக விருதை வென்றுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது அதன் இயக்குனரான சோலோ ஜாவோவுக்கு அளிக்கப் பட்டு உள்ளது. இந்த விருதை வென்ற இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இந்த விருதைப் பெற்ற முதலாவது பெண்மணி பார்பரா ஸ்ட்ரைசாண்ட் (1984).
மறைந்த அமெரிக்க நடிகரான சாட்விக் போஸ்மேன் என்பவர் 'மா ரெய்னியின் பிளாக் பாட்டம்' என்ற படத்தில் லீவி கிரீன் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக ‘ஒரு இயக்கப் படம் - நாடகத்தில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை’ வென்றுள்ளார்.