TNPSC Thervupettagam

79வது சுதந்திர தின சிறப்பம்சங்கள்

August 17 , 2025 2 days 62 0
  • பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12வது முறையாக செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
  • இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருத்துரு “Naya Bharat” என்பதாகும் 
  • ஆகஸ்ட் 15 அன்று தொடர்ச்சியாக அதிக உரைகளை நிகழ்த்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை அவர் முறியடித்து வருகிறார்.
  • 17 சுதந்திர தின உரைகளை நிகழ்த்திய ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக அவர் உள்ளார்.
  • கடந்த ஆண்டு 78வது சுதந்திர தின உரையின் போதான தனது 98 நிமிட சாதனையை தானே முறியடித்தார்.
  • 103 நிமிடங்கள் நீடித்த இந்த உரை, இது வரையில் வழங்கப்படாத நீண்ட உரையாகும். என்பதோடு இதன் மூலம் 2047 ஆம் ஆண்டிற்குள் ஒரு மேம்பட்ட இந்தியாவிற்கான ஒரு செயல் திட்டத்தினை முன் வைத்தார்.
  • இது இந்திய வரலாற்றில் எந்தவொரு பிரதமரும் ஆற்றிய மிக நீண்ட உரையாகும்.
  • இந்தியாவின் முன்னேற்றம் ஆனது தன்னிறைவு, புதுமை மற்றும் குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
  • வர்த்தகர்கள் தங்கள் கடைகளில் உள்நாட்டு/சுதேசித் தயாரிப்புகளை விற்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.
  • பிற முக்கிய அறிவிப்புகள்:
    • 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாறும் என்று பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
    • அடுத்த தலைமுறை வடிவிலான சரக்கு மற்றும் சேவை வரிச் சீர்திருத்தங்கள் 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்குள் அறிமுகப்படுத்தப்படும்.
    • அனைத்துக் குடிமக்களுக்கும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதை GST மறுசீரமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • பொது நலனுக்காக 280 காலாவதியான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருத்தப்பட்டன.
    • மேம்பட்ட பாதுகாப்புத் திறன்களுக்காக சுதர்சன் சக்ரா திட்டம் தொடங்கப்பட்டது.
    • 2035 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பொது இடங்களும் நாடு தழுவிய பாதுகாப்புக் கவசத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
    • "டம் கம், பர் டம் ஜியாதா" - மலிவு விலையில் ஆனால் உயர்தர தயாரிப்புகளை ஊக்குவித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்