பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12வது முறையாக செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருத்துரு “Naya Bharat” என்பதாகும்
ஆகஸ்ட் 15 அன்று தொடர்ச்சியாக அதிக உரைகளை நிகழ்த்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை அவர் முறியடித்து வருகிறார்.
17 சுதந்திர தின உரைகளை நிகழ்த்திய ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக அவர் உள்ளார்.
கடந்த ஆண்டு 78வது சுதந்திர தின உரையின் போதான தனது 98 நிமிட சாதனையை தானே முறியடித்தார்.
103 நிமிடங்கள் நீடித்த இந்த உரை, இது வரையில் வழங்கப்படாத நீண்ட உரையாகும். என்பதோடு இதன் மூலம் 2047 ஆம் ஆண்டிற்குள் ஒரு மேம்பட்ட இந்தியாவிற்கான ஒரு செயல் திட்டத்தினை முன் வைத்தார்.
இது இந்திய வரலாற்றில் எந்தவொரு பிரதமரும் ஆற்றிய மிக நீண்ட உரையாகும்.
இந்தியாவின் முன்னேற்றம் ஆனது தன்னிறைவு, புதுமை மற்றும் குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
வர்த்தகர்கள் தங்கள் கடைகளில் உள்நாட்டு/சுதேசித் தயாரிப்புகளை விற்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.
பிற முக்கிய அறிவிப்புகள்:
2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாறும் என்று பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
அடுத்த தலைமுறை வடிவிலான சரக்கு மற்றும் சேவை வரிச் சீர்திருத்தங்கள் 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்குள் அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்துக் குடிமக்களுக்கும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதை GST மறுசீரமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொது நலனுக்காக 280 காலாவதியான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருத்தப்பட்டன.
மேம்பட்ட பாதுகாப்புத் திறன்களுக்காக சுதர்சன் சக்ரா திட்டம் தொடங்கப்பட்டது.
2035 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பொது இடங்களும் நாடு தழுவிய பாதுகாப்புக் கவசத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
"டம் கம், பர் டம் ஜியாதா" - மலிவு விலையில் ஆனால் உயர்தர தயாரிப்புகளை ஊக்குவித்தல்.