ஒரு மூன்று நாள் நிகழ்வான 2019 ஆம் ஆண்டின் 7வது உலக இந்துப் பொருளாதார மன்றத்தின் மாநாடு மும்பையில் நடைபெற்றது.
இதன் கருத்துரு, “வளமான சமூகம் : பலமான சமூகம்” என்பதாகும்.
இது இந்துச் சமூகத்தில் நிதியியல் ரீதியில் வெற்றிகரமான நபர்களான வர்த்தகர்கள், வங்கியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்கள் தங்கள் சக வெற்றியாளர்களுடன் வியாபார அறிவு, நுணுக்கம் மற்றும் மூலங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்திடச் செய்ய எண்ணுகின்றது.