காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற 7வது நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பில், பூங்காவில் முதன்முதலில் யுரேசிய வாத்து (மெர்கெல்லஸ் ஆல்பெல்லஸ்) காணப்பட்டது.
இக்கணக்கெடுப்பின் போது 1,05,000க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் பதிவு செய்யப் பட்டன.
காசிரங்கா–லாவோகோவா–புர்ஹாச்சபோரி வெள்ளப்பெருக்கு வளாகம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
புலம்பெயர்ந்த பறவைகளுக்கான மத்திய ஆசியப் பாதையில் காசிரங்கா ஒரு முக்கியமான தளமாக இந்த கணக்கெடுப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.