8வது சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA) சபையானது புது டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த சபையானது, முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும், சவால்களை நிவர்த்தி செய்யும் மற்றும் மலிவு விலையிலான சூரிய சக்தி அணுகலுக்கான முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்கும்.
இந்தியா தனது மொத்த மின்சார உற்பத்தித் திறனில் 50 சதவீதத்தைப் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறுவதற்கான அதன் இலக்கு ஆண்டினை விட முன்னதாகவே அந்த இலக்கை அடைந்துள்ளது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளர் மற்றும் இரண்டாவது பெரிய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சந்தையாகும்.
பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் யோஜனாவின் கீழ் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரையில் சூரிய சக்தி நிறுவல்கள் நிறுவப்பட்டுள்ளன.