8வது மண்வளக் குறிப்பேடுத் திட்ட தினம் - பிப்ரவரி 19
February 21 , 2023 908 days 318 0
மண்வளக் குறிப்பேடு தினமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
இது வளமான மண்ணைப் பராமரிக்கச் செய்வதன் ஒரு முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மற்றும் மண்ணின் வளத்தினை மேம்படுத்தும் நடைமுறைகளைக் கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவிக்கிறது.
மண்வளக் குறிப்பேடுத் திட்டமானது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்வளக் குறிப்பேடு அட்டைகள் வழங்கும் வகையில் இத்திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நோக்கமானது, ஊட்டச்சத்து மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் மண் வளப் பரிசோதனையை ஊக்குவிப்பதாகும்.
இது உரப் பயன்பாட்டினை 8 முதல் 10% வரை குறைத்து, பயிர்களின் ஒட்டுமொத்த மகசூலினை 5% ஆக அதிகரித்துள்ளது.