TNPSC Thervupettagam

8வது மத்திய ஊதிய ஆணையம்

November 1 , 2025 4 days 40 0
  • 8வது மத்திய ஊதிய ஆணையத்திற்கான குறிப்பு விதிமுறைகளை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
  • முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இந்த ஆணையத்திற்குத் தலைமை தாங்க உள்ளார்.
  • இதில், பெங்களூருவின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் புலக் கோஷ் உறுப்பினராக (பகுதி நேரம்) உள்ளார்.
  • மத்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் இதன் உறுப்பினர்-செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த ஆணையம், அது அமைக்கப் பட்ட 18 மாதங்களுக்குள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்.
  • பொருளாதார நிலைமைகள், நிதிச் சீரமைப்பு, ஓய்வூதியப் பொறுப்புகள், மாநில நிதி மற்றும் தற்போதைய ஊழியர் ஊதியங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 8வது CPC பரிந்துரைகளை வழங்கும்.
  • 8வது மத்திய ஊதிய ஆணையப் பரிந்துரைகள் பொதுவாக 01.01.2026 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 7வது ஊதிய ஆணையமும் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது, ஆனால் ஊழியர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆறு மாத காலத்திற்கு நிலுவைத் தொகை வழங்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்