புவி அறிவியல் அமைச்சகமானது, சர்வதேச கடல்படுக்கை ஆணையத்தின் (ISA) 8வது வருடாந்திர ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தினை கோவாவில் நடத்தியது.
கோவாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) தேசிய கடல் சார் ஆய்வு நிறுவனம் (NIO) ஏற்பாடு செய்த நிகழ்வில் ரஷ்யா, ஜப்பான், சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட 14 ISA ஆய்வு ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டமானது ஆழ்கடல் ஆய்வு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகள், ஒப்பந்த இணக்கம் மற்றும் நிலையான கடல் வள மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
இந்தியா இந்தியப் பெருங்கடலில் பல் கனிமச் சல்பைடுகளுக்கான (PMS) இரண்டு ஆய்வு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளதோடு ISA ஆணையத்தின் கீழ் இத்தகைய இரட்டை ஒப்பந்தங்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாவாகும்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகத்திற்கும் ISA ஆணையத்திற்கும் இடையே இரண்டாவது PMS ஆய்வு ஒப்பந்தமானது கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.