8 இந்தியக் கடற்கரைகள் ஓர் அரசுசாரா நிறுவனமான சுற்றுச்சூழல் கல்வி நிறுவனம் என்ற அமைப்பிடமிருந்து “புகழ்பெற்ற நீலக் கொடி” சான்றிதழைப் பெற்று உள்ளன.
குஜராத்தின் துவாரகாவில் உள்ள சிவராஜ்பூர் கடற்கரை, டையூவில் உள்ள கோஹ்லா கடற்கரை, கர்நாடகாவில் உள்ள காசர்கோடு மற்றும் பாடுபிட்ரி கடற்கரைகள், கேரளாவில் உள்ள கப்பட் கடற்கரை, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ருஷிகொண்டா, ஒடிசாவில் உள்ள தங்கக் கடற்கரை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள ராதாநகர் கடற்கரை ஆகியவை தற்பொழுது நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ளன.