8 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதம மந்திரித் திட்டங்கள்
May 12 , 2023 820 days 382 0
பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா (PMSBY), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகியவை எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன.
இத்திட்டங்களானது, மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் மலிவு விலையில் காப்பீடு ஆகியவற்றினை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த மூன்று திட்டங்களும் 2015 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா நகரில் தொடங்கி வைக்கப்பட்டன.
பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகியவை முறைசாரா தொழில்துறைப் பிரிவைச் சேர்ந்த மக்களை நிதி ரீதியாகப் பாதுகாப்பு மிக்கப் பிரிவினராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அடல் பென்ஷன் யோஜனா என்பது முதுமைக் காலத்திற்குத் தேவையான தேவைகளை ஈடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.