8 மருத்துவ உபகரணங்கள் மருந்துப் பொருட்களாக அறிவிக்கப்படுதல்
February 11 , 2019 2372 days 1437 0
2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத் திருத்த பிரிவு 3ன் கீழ் அனைத்துப் பொருத்தப்படக்கூடிய கருவிகள் உட்பட 8 மருத்துவ உபகரணங்களை மத்திய சுகாதார அமைச்சகம் மருந்துப் பொருட்களாக அறிவித்து இருக்கின்றது.
இந்த மருத்துவ உபகரணங்கள் பின்வருமாறு
அனைத்துப் பொருத்தப்படக்கூடிய மருத்துவ உபகரணங்கள்
சிடி ஸ்கேன்
எம்.ஆர்.ஐ கருவி
உதறல் நீக்கு இயந்திரம்
டயாலிசிஸ் உபகரணம்
PET இயந்திரம்
எக்ஸ்ரே இயந்திரம்
எலும்பு மஜ்ஜை செல் பிரிப்பு இயந்திரம்
தேசிய மருத்துவ உபகரணங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையமான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (The Central Drugs Standard Control Organisation - CDSCO), மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் ஒரு வழிமுறையை உருவாக்கிட பணிபுரிந்துக் கொண்டிருக்கின்றது.