இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா நகரில் 82வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
‘ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் தளம்’ என்ற கருத்தினை மோடி அவர்கள் இதில் முன் வைத்தார்.
இந்தியாவில் உள்ள சட்டப் பேரவைகளின் உயர்நிலை அமைப்பான அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டு அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது.
இதன் முதல் மாநாடானது 1921 ஆம் ஆண்டில் சிம்லா நகரில் நடைபெற்றது.
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சகோதரரான மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் வித்தல்பாய் படேல், 1925 ஆம் ஆண்டில் மத்தியச் சட்டப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்காக இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதாவும் இந்த அவையில் தான் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவானது 1925 ஆம் ஆண்டில் மோதி லால் நேரு அவர்களால் முன் மொழியப் பட்டு லாலா லஜபதி ராய் அவர்களால் வழி மொழியப் பட்டது.
இதில் மாநிலச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்காமல், அதைத் திரும்பி அனுப்புவதற்கான காரணங்களை ஏன் தெரிவிப்பதில்லை என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் M.அப்பாவு கேள்வி எழுப்பினார்.
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருக்கும் (சில) ஆளுநர்களை சுட்டிக் காட்டி, எந்தவொரு மசோதாவின் மீதும் முடிவெடுப்பதற்கு ஒரு பிணைப்பு காலக்கெடுவை உருவாக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.