TNPSC Thervupettagam

8வது EnviStats India 2025 அறிக்கை

June 11 , 2025 2 days 24 0
  • சமீபத்தில் 8வது "EnviStats India 2025: சுற்றுச்சூழல் புள்ளிவிவரங்கள்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
  • வருடாந்திர சராசரி வெப்பநிலையானது 2001 ஆம் ஆண்டில் 25.05 டிகிரி செல்சியசில் இருந்து, 2024 ஆம் ஆண்டில் 25.74°C ஆக அதிகரித்தது.
  • 2001 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான வருடாந்திர மழைப்பொழிவுத் தரவானது, பருவமழை செயல்பாடுகளின் தாக்கத்திற்குள்ளான மிக குறிப்பிடத்தக்க வருடாந்திர மாறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்தியாவில் 20,613 கடல் சார் விலங்கினங்கள் உள்ளன.
  • இந்தியாவில் 9,436 நன்னீர் இனங்கள், இந்தியச் சதுப்புநில அமைப்பில் 5,023 இனங்கள், கழிமுக சுற்றுச்சூழல் அமைப்பில் 3,383 இனங்கள் மற்றும் அதன் மண்வளச் சூழலியல் அமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த 22,404 இனங்கள் உள்ளன.
  • உள்நாட்டு மீன் உற்பத்தியானது 2013-14 ஆம் ஆண்டில் இருந்த 61.36 லட்சம் டன்னில் இருந்து, 2023–24 ஆம் ஆண்டில் 139.07 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்துப் பெறப்பட்ட மின்சார உற்பத்தி 2013-14 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையிலான ஒரு காலக் கட்டத்தில் 65520 GWh என்ற ஒரு அளவிலிருந்து 2,25,835 GWh ஆக அதிகரித்துள்ளது.
  • அதே காலக் கட்டத்தில் அனல் மின் உற்பத்தி 7,92,053 GWh என்ற அளவிலிருந்து 13,26,549 GWh ஆக அதிகரித்துள்ளது.
  • உள்நாட்டு மீன் உற்பத்தியானது, 2013-14 முதல் 2023–24 ஆம் ஆண்டு வரையிலான ஒரு காலக் கட்டத்தில் 61.36 லட்சம் டன்னிலிருந்து 139.07 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்