மத்திய ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி அவர்கள் காணொலி வாயிலாக 8வது இந்திய சர்வதேசப் பட்டுக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய பட்டுக் கண்காட்சி இதுவாகும்.
இந்தக் கண்காட்சியானது இந்தியப் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆணையத்தின் கீழ் காணொலித் தளத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றது.
இந்தியாவில் பட்டு
சீனாவிற்கு அடுத்து 2வது மிகப்பெரிய பட்டு உற்பத்தியாளர் நாடு இந்தியா ஆகும்.
உலகெங்கிலும் பட்டின் மிகப்பெரிய நுகர்வைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.
ஏறத்தாழ 97% கச்சா மல்பெரி வகை பட்டானது 5 மாநிலங்களில் உற்பத்தி செய்யப் படுகின்றது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகியவை அந்த 5 மாநிலங்களாகும்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஐதராபாத் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கோபிசெட்டிப் பாளையம் ஆகியவை முதலில் தானியங்கி பட்டு நூற்பு அலகுகளை ஏற்படுத்திய சில இடங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில், மல்பெரி பட்டு உற்பத்தியானது சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.