இந்தியத் தரநிர்ணய முகமை (BIS) 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் கட்டாயத் தங்கத்திற்கான ஹால்மார்க் தரக்குறியீடு வகைகளின் பட்டியலில் 9 காரட் தங்கத்தைச் சேர்ப்பதாக அறிவித்தது.
தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களின் நேர்த்தி மற்றும் தரக் குறியிடுதல் ஆகியவற்றிற்கான விவரக் குறிப்புகளை இத்தர நிலை வரையறுக்கிறது.
இந்தச் சேர்க்கையுடன், தங்கத்திற்கான ஹால்மார்க் தரக் குறியீட்டுத் தரங்களின் பட்டியலில் இப்போது 24KF, 24KS, 23K, 22K, 20K, 18K, 14K மற்றும் இப்போது இணைந்த 9K ஆகியவை அடங்கும்.