9 வது வருட இராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தை
November 23 , 2018 2449 days 704 0
இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றிற்கிடையேயான 9-வது ஆண்டு இராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தை பீஜீங்கில் நடைபெற்றது.
இருநாட்டு பாதுகாப்பு பிரதிநிதிகளுக்குமிடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையானது
பாதுகாப்புத் துறை செயலாளர் சஞ்சய் மித்ரா மற்றும்
சீனாவின் மத்திய இராணுவ ஆணைய கூட்டு அலுவலர் துறையின் துணைத் தலைவர்
ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டது.
இந்த 9வது வருடாந்திர இராணுவம் மற்றும் பாதுகாப்பு பேச்சு வார்த்தையானது டோக்லாம் சச்சரவையடுத்து ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்றது.
இந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தையானது இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளுக்கிடையேயான 21-வது எல்லை சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு முன்னதாக சீனாவின் துஜியாங்யான் நகரத்தில் நடைபெற்றது.