TNPSC Thervupettagam

90 மில்லியன் ஆண்டுகள் பழமையான தாவர உண்ணி டைனோசர்

May 4 , 2024 14 days 90 0
  • அர்ஜென்டினாவைச் சேர்ந்த தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய நடுத்தர அளவிலான தாவர உண்ணி டைனோசரை கண்டறிந்ததாக அறிவித்துள்ளனர்.
  • இது வேகமாக ஓடக் கூடியதாகவும், 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய படகோனியாவில் கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்ததாகவும் கருதப் படுகிறது.
  • சாகிசரஸ் நெகுல் என்றப் பெயரிடப்பட்ட இந்த விலங்கு பியூப்லோ பிளாங்கோ என்ற இயற்கைக் காப்பகத்தில் கண்டறியப்பட்டது.
  • இந்த மிகப்பெரிய சாகிசரஸ் 2.5 அல்லது 3 மீட்டர் நீளமும், 70 சென்டிமீட்டர் உயரமும் (8 முதல் 10 அடி நீளம் மற்றும் 27 அங்குல உயரம்) கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்