பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கோகபீல் ஏரி, ராம்சர் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தளமாக நியமிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் மொத்த ராம்சர் தளங்களின் எண்ணிக்கையை 94 ஆகக் உயர்த்துகிறது.
கங்கை நதிக்கும் மகாநந்தா நதிக்கும் இடையில் அமைந்துள்ள இந்த ஏரியானது, நதி வளைந்து நெளிந்து செல்லும் தன்மையால் உருவாக்கப்பட்ட ஒரு குதிரைக் குளம்பு வடிவ ஈரநிலமாக செயல்படுகிறது.
கோகபீல் ஆனது முன்னதாக 2019 ஆம் ஆண்டில் பீகாரின் முதல் சமூக வளங் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
சுமார் 30 வலசை இனங்கள் மற்றும் பல அச்சுறுத்தலுக்கு உள்ளான அல்லது எளிதில் பாதிக்கப்படக் கூடிய பறவைகள் உட்பட 90க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்த இடத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
கோகபீல் இதில் சேர்க்கப்பட்டதன் மூலம், பீகாரில் தற்போது ஆறு ராம்சர் தளங்கள் உள்ளன.
ராம்சர் ஈரநிலங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா ஆசியாவில் முதலிடத்திலும், ஐக்கியப் பேரரசு மற்றும் மெக்சிகோ ஆகியவற்றிற்குப் பிறகு உலகளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.