TNPSC Thervupettagam

94வது ராம்சர் ஈரநிலம் - கோகபீல் ஏரி

November 5 , 2025 16 hrs 0 min 62 0
  • பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கோகபீல் ஏரி, ராம்சர் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தளமாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் மொத்த ராம்சர் தளங்களின் எண்ணிக்கையை 94 ஆகக் உயர்த்துகிறது.
  • கங்கை நதிக்கும் மகாநந்தா நதிக்கும் இடையில் அமைந்துள்ள இந்த ஏரியானது, நதி வளைந்து நெளிந்து செல்லும் தன்மையால் உருவாக்கப்பட்ட ஒரு குதிரைக் குளம்பு வடிவ ஈரநிலமாக செயல்படுகிறது.
  • கோகபீல் ஆனது முன்னதாக 2019 ஆம் ஆண்டில் பீகாரின் முதல் சமூக வளங் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
  • சுமார் 30 வலசை இனங்கள் மற்றும் பல அச்சுறுத்தலுக்கு உள்ளான அல்லது எளிதில் பாதிக்கப்படக் கூடிய பறவைகள் உட்பட 90க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்த இடத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • கோகபீல் இதில் சேர்க்கப்பட்டதன் மூலம், பீகாரில் தற்போது ஆறு ராம்சர் தளங்கள் உள்ளன.
  • ராம்சர் ஈரநிலங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா ஆசியாவில் முதலிடத்திலும், ஐக்கியப் பேரரசு மற்றும் மெக்சிகோ ஆகியவற்றிற்குப் பிறகு உலகளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்