TNPSC Thervupettagam

950 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள்

July 18 , 2026 10 days 75 0
  • தமிழ்நாடு 2026-27 கல்வி ஆண்டிற்கான 950 எம்பிபிஎஸ் இடங்களைச் சேர்க்கவுள்ளது,
  • இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 78 மருத்துவக் கல்லூரிகளில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 13,999 ஆக உயரும்.
  • கர்நாடகா (15,395) மற்றும் உத்தரப்பிரதேசம் (14,000) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த படியாக இந்தியாவில் மூன்றாவது அதிக எம்பிபிஎஸ் இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
  • இந்த கூடுதல் இடங்களுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 13 மருத்துவக் கல்லூரிகளில் (3 அரசு மற்றும் 10 தனியார்) அனுமதி அளித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,200 ஆக உயர்ந்துள்ளது.
  • நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100லிருந்து 150 ஆக இடங்களை உயர்த்த மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் (MARB) ஒப்புதல் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்