TNPSC Thervupettagam

97வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றம்

July 24 , 2021 1455 days 708 0
  • 97வது அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடித் தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • ஆனால் அது 97வது திருத்தத்தால் சேர்க்கப்பட்ட ஒரு பகுதியை நீக்கியுள்ளது.
  • குஜராத் உயர்நீதிமன்றத்தின் 2013 ஆம் ஆண்டின் தீர்ப்பை ஆதரிக்கும் வகையில் 97வது அரசியலமைப்புத்  திருத்தத்தின் சில விதிகளை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது.
  • கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலப் பட்டியலில் இருப்பதால், அவை தொடர்பாக நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்தத் திருத்தமானது கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்காக மாநிலங்களுக்குப் பிரத்தியேக அனுமதியை அளிக்கிறது.
  • கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தில் சீரான தன்மையைக் கொண்டு வருவதற்காக இந்தத் திருத்தம் இயற்றப்பட்டதாகவும், அது மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க வில்லை என்றும் மத்திய அரசு கூறியது.
  • ஆனால் மத்திய அரசானது இந்த விவகாரத்தில் சீரான தன்மையை அடைய விரும்பினால், அரசியலமைப்பின் 252வது சட்டப் பிரிவின் கீழ் இதை அணுகுவதே ஒரு  சிறந்த வழியாகும்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு வேண்டி அதன் ஒப்புதலின் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தை அரசியலமைப்பின் 252வது பிரிவு பாராளுமன்றத்திற்கு  வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்