97வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றம்
July 24 , 2021 1481 days 737 0
97வது அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடித் தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஆனால் அது 97வது திருத்தத்தால் சேர்க்கப்பட்ட ஒரு பகுதியை நீக்கியுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் 2013 ஆம் ஆண்டின் தீர்ப்பை ஆதரிக்கும் வகையில் 97வது அரசியலமைப்புத் திருத்தத்தின் சில விதிகளை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது.
கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலப் பட்டியலில் இருப்பதால், அவை தொடர்பாக நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தத் திருத்தமானது கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்காக மாநிலங்களுக்குப் பிரத்தியேக அனுமதியை அளிக்கிறது.
கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தில் சீரான தன்மையைக் கொண்டு வருவதற்காக இந்தத் திருத்தம் இயற்றப்பட்டதாகவும், அது மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க வில்லை என்றும் மத்திய அரசு கூறியது.
ஆனால் மத்திய அரசானது இந்த விவகாரத்தில் சீரான தன்மையை அடைய விரும்பினால், அரசியலமைப்பின் 252வது சட்டப் பிரிவின் கீழ் இதை அணுகுவதே ஒரு சிறந்த வழியாகும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு வேண்டி அதன் ஒப்புதலின் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தை அரசியலமைப்பின் 252வது பிரிவு பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது.