AMBIS உடல் அங்க (பயோமெட்ரிக்) குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பு – மும்பை
August 1 , 2019 2209 days 845 0
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கான ஒரு மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பானது மும்பையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
“AMBIS” (Automated Multimodal Biometric Identification System) ஆனது “தானியங்குப் பல்முனை உடல் அங்க அடையாள அமைப்பு” என்ற பெயர் கொண்டது. இந்தியாவில் உள்ள காவல் துறையினால் பயன்படுத்தப்படும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது அமைப்பு இதுவாகும்.
AMBIS ஆனது மைய வழங்ககத்துடன் (Server) இணைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து குற்றவாளிகளின் புகைப்படங்கள், கைரேகைகள் மற்றும் கருவிழி ஆகியவற்றைச் சேமித்து வைக்கின்றது.
இது கணிப்பொறியின் சுட்டியை அழுத்தியவுடன் குற்றவாளிகளை அடையாளம் காண உதவுகின்றது. இது உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் குற்றவாளிகள் இருந்தாலும், அது குறித்தத் தகவலை காவல் துறையின் மற்ற பிரிவுகளுக்கு வழங்குகின்றது.