R – 27 வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை – இரஷ்யா
August 1 , 2019 2113 days 742 0
இரஷ்யாவிடமிருந்து R-27 என்ற வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய ஒரு ஏவுகணையைப் பெறுவதற்கு ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஏவுகணையானது இந்திய விமானப்படையின் போர் விமானமான Su-30 MKI என்ற விமானத்தில் பொருத்தப் படவிருக்கின்றது. இது மிக அதிக தூரத்தில் நடைபெறும் போரின் போது அதன் திறன்களை அதிகரிக்கும்.
இது 10 – I என்ற திட்டத்தின் கீழ் பெறப் படவிருக்கின்றது. 10 – I என்ற திட்டமானது அனைத்து 3 ஆயுதப் படைகளும் போர்க் கழிவுக் காப்பகத்தை (WWR - War Wastage Reserve) பராமரிப்பதைக் கட்டாயமாக்குகின்றது.
WWR என்பது ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச காலகட்டத்திற்கு முக்கியமான ஆயுத அமைப்புகள் மற்றும் உதிரிப் பொருட்களின் பராமரிப்பைக் குறிக்கும்.