லடாக் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கமானது ஜம்மு–காஷ்மீரில் உள்ள லே பகுதியில் குங்குமப்பூ வளர்ப்பில் பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளது.
தற்போது, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மற்றும் பாம்பூர் பகுதிகளில் குங்குமப்பூ வளர்க்கப்படுகின்றது.
குங்குமப்பூ வளர்க்கப்படும் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் காலநிலைகளில் உள்ள ஒற்றுமையை லடாக் கொண்டுள்ளது.
குங்குமப்பூவானது உலகின் விலையுயர்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்றாகும். மேலும் அதன் மருத்துவ, ஒப்பனை மற்றும் நறுமணப் பண்புகளால் இதற்கு அதிக தேவை உள்ளது.
இது குரோகஸ் சாடிவஸ் எனும் தாவரவியல் பெயருடைய மிகச்சிறிய தாவரத்திலிருந்து வளர்கிறது.