A பிரிவு கிரிக்கெட் போட்டியில் பெற்ற அதிக ஓட்டங்கள்
November 30 , 2022 995 days 562 0
தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் குவித்து ஆடவர்களுக்கான A பிரிவு கிரிக்கெட் போட்டியில் பெற்ற அதிக தனிநபர் ஓட்டங்கள் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.
பெங்களூரு நகரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்த சாதனை ஆனது மேற்கொள்ளப் பட்டது.
C பிரிவு கிரிக்கெட் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முன், A பிரிவு கிரிக்கெட் போட்டியில் 500 ரன்களைத் தாண்டிய முதல் அணியாக தமிழ்நாடு அணி மாறியது.
இதற்கு முந்தைய இத்தகையச் சாதனையானது 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெவோன் அணிக்கு எதிரான போட்டியில் சோமர்செட் அணி 346 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
ஆடவர்களுக்கான A பிரிவு கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்றப் பெருமையை ஜெகதீசன் பெற்றார்.
இவர் அலிஸ்டர் பிரவுன் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை முந்தி அதிக தனிநபர் ஓட்டங்கள்எடுத்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.