AAHAR-2022: சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி
April 28 , 2022 1234 days 535 0
ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியான AAHAR-2022, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்புடன் (ITPO) இணைந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்தக் கண்காட்சி நடத்தப் பட்டது.
இது 36வது கண்காட்சி ஆகும்.
இந்த கண்காட்சியானது, பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் வேண்டிய புதிய வணிக வழிகளை உருவாக்குவது குறித்த தகவல்களைப் பெறுவதற்கு என்று ஒரு நிகரற்ற வாய்ப்பை வழங்கும்.
நாட்டின் ஆற்றல் மிக்க வளர்ந்து வரும் சந்தையைச் செயல்திறன் மிக்க முறையிலும், பயனுள்ள முறையில் சந்தைப்படுத்தவும் இந்தக் கண்காட்சி உதவும்.