பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அதிவேகமான, வானில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கவல்ல அபியாஸ் என்ற வாகனத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.
அபியாஸ் பலவகையான ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப் படும்.
ஒடிசாவின் சந்திப்பூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடா கடற்கரையருகே அமைந்த ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இது பரிசோதிக்கப்பட்டது.
இது பெங்களூருவினைத் தலைமையிடமாகக் கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி மேம்பாட்டு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டது.