தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து ஆஸ்திரேலியா-கனடா-இந்தியா தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கூட்டாண்மையை (ACITI) தொடங்கி உள்ளன.
இந்த முத்தரப்பு கூட்டாண்மையானது செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள், முக்கிய கனிமங்கள் மற்றும் மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
கனடாவின் AI மற்றும் சுத்தமான தொழில்நுட்ப நிபுணத்துவம், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் ஆஸ்திரேலியாவின் வளம் மற்றும் வணிகமயமாக்கல் திறன்களை இணைப்பதை ACITI நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மையானது நிகர பூஜ்ஜிய தொழில்நுட்பங்கள், தொழில்துறை திட்டங்கள் மற்றும் நிலையான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் (2025) மூன்று நாடுகளின் தலைவர்கள் சந்தித்த பிறகு இது அறிவிக்கப் பட்டது.