இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை ஆஸ்திரேலியா-கனடா-இந்தியா தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் (ACITI) கூட்டாண்மை என்ற புதியதொரு கூட்டாண்மையை அறிவித்துள்ளன.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் மூன்று நாடுகளின் பிரதமர்களின் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தூய்மையான ஆற்றல் மற்றும் முக்கியக் கனிமங்கள் போன்ற முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றுவதை இந்தக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மூன்று நாடுகளிடையே வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது.
பொதுச் சேவைகளை மேம்படுத்தச் செய்வதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு குறித்து மூன்று நாடுகளும் கூட்டாக ஆராய உள்ளன.