மத்திய மின்துறை அமைச்சகம் ஆனது ₹1,000 கோடியில் தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஆற்றல் திறன்மிகு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உதவுதல் (ADEETIE) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வு ஹரியானாவின் பானிபட்டில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) தூய்மையான மற்றும் ஆற்றல் திறன்மிகு தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதை ஆதரிக்கிறது.
ADEETIE திட்டமானது ஆற்றல் திறன்மிகு வாரியத்தால் (BEE) செயல்படுத்தப்படுகிறது.
இது நிதி மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது என்பதோடு இதில் பின்வருவன அடங்கும்:
கடன்களுக்கான வட்டி மானியம்
முதலீட்டுத் தர ஆற்றல் தணிக்கைகள்
விரிவான திட்ட அறிக்கைகள் (DPRs) தயாரித்தல்
செயல்படுத்தலுக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு
இந்தத் திட்டம் முதல் கட்டத்தில் சுமார் 60 MSME தொகுப்புகளையும், 14 ஆற்றல் மிகு துறைகளை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.