இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதல் பல-நிலை மலேரியா தடுப்பூசியை வணிகமயமாக்க இந்திய இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட், டெக்வின்வென்ஷன் லைஃப்கேர் பிரைவேட் லிமிடெட், பனாசியா பயோடெக் லிமிடெட், பயோலாஜிக்கல் இ லிமிடெட் மற்றும் சைடஸ் லைஃப்சயின்சஸ் ஆகியவற்றிற்கு உரிமம் வழங்கியுள்ளது.
இந்தத் தடுப்பூசியானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் அதன் கூட்டாண்மை அமைப்புகளால் உருவாக்கப்பட்டது.
இது ஒட்டுண்ணி, இரத்த ஓட்டத்தில் நுழைவதற்கு முன்பே அதனைக் குறி வைத்து அதன் பரவலைத் தடுக்கிறது.
AdFalciVax எனப்படும் இந்தத் தடுப்பூசி, பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்திற்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மலேரியா பரவலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய பாதிப்புகளில் 1.4% மற்றும் உயிரிழப்புகளில் 0.9% மலேரியா காரணமாக ஏற்படுகிறது என்பதோடு இந்தியாவின் 95% மக்கள் மலேரியா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழ்கின்றனர்.