சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகமானது முதல் ADIP (Assistance to Disabled Persons for purchasing and fitting of aids) முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிக் கருவிகளை வாங்குவதற்கும் அதைப் பொருத்துவதற்கும் வேண்டிய உதவி வழங்குவதை ADIP நோக்கமாகக் கொண்டு உள்ளது.
பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் ADIP திட்டத்தின் கீழ் திவ்யாங்ஜான்களுக்கு (மாற்றுத் திறனாளிகளுக்கு) இலவச உதவிக் கருவிகளை விநியோகிக்க இந்த முகாமானது நடத்தப் பட்டது.
இந்த முகாமை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலிம்கோ (இந்தியாவின் செயற்கைக் கால்கள் உற்பத்தி நிறுவனம்) நிறுவனமானது ஏற்பாடு செய்துள்ளது.