TNPSC Thervupettagam

ADMM-பிளஸ் தீவிரவாத எதிர்ப்பு சந்திப்பு 2026

January 19 , 2026 3 days 45 0
  • தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான 16வது ASEAN பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்-பிளஸ் (ADMM-பிளஸ்) நிபுணர்கள் பணிக்குழு புது டெல்லியில் நடைபெற்றது.
  • ADMM-பிளஸ் கட்டமைப்பின் கீழ் 16வது நிபுணர்கள் பணிக் குழுவிற்கு இந்தியாவும் மலேசியாவும் கூட்டாக தலைமை தாங்குகின்றன.
  • தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் நிபுணர்கள் பணிக்குழுக்களின் 2024–2027 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு கால சுழற்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு உள்ளது.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான தகவல் பகிர்வு, செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவை இதன் விவாதங்களில் அடங்கும்.
  • டேபிள் டாப் பயிற்சி திட்டமிடல் ஜனவரி 14, 2026 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • மலேசியா 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் பயிற்சியை நடத்தும் என்பதோடு, இந்தியா 2027 ஆம் ஆண்டில் ஒரு களப் பயிற்சியை நடத்தும்.
  • கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், அமைதிக் காப்பு, இராணுவ மருத்துவம், கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் இணையவெளிப் பாதுகாப்பு போன்ற துறைகளில் நடைமுறை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தளமாக ADMM-Plus செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்