ADMM plus கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி - பன்னாட்டுப் பயிற்சி
May 3 , 2019 2263 days 736 0
இந்தியக் கடற்படையின் INS கொல்கத்தா மற்றும் INS சக்தி ஆகியவை ADMM plus (ஆசியான் மற்றும் இதர நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூடுகை - ASEAN Defence Ministers’ Meeting Plus) நாடுகளின் பன்னாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக புருனேயைச் சென்றடைந்துள்ளது.
மே மாதம் 1 முதல் 9 வரை நடைபெறும் இது கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியாகும்.
இந்த ADMM plus கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மீதான பயிற்சியானது (ADMM plus Ex MS & CT) ADMM Plus நாடுகள் குழுவின் பன்னாட்டுப் பயிற்சியாகும்.
இந்தப் பதிப்பானது புருனேவில் தொடங்கி சிங்கப்பூரில் முடிவடையும்.
இந்தப் பயிற்சியின் போது இந்தியக் கடற்படையானது பயிற்சியில் கலந்து கொள்ளும் பல்வேறு ஆசியான் மற்றும் அதன் பிற உறுப்பு நாடுகளின் கடற்படைகளுடன் துறைமுக மற்றும் கடற்பரப்புகளில் ஏற்படும் பல சிக்கலான நடவடிக்கைகள் பற்றிய நிபுணத்துவ கலந்துரையாடல்களில் ஈடுபடும்.
ADMM Plus
ADMM Plus ஆனது 10 நாடுகளைக் கொண்ட தளமாகும்.
இது ஆசியான் மற்றும் அதன் இதர கலந்துரையாடல் நாடுகளைக் கொண்டதாகும்.
குழு உறுப்பினர்களின் மத்தியில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.