13 வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ADMM-Plus) பிலிப்பைன்ஸின் செபுவில் உள்ள லாபு-லாபு நகரில் நடைபெற்றது.
"Navigating Our Future, Together" என்ற கருத்துருவுடன் 2026 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் ஆசியான் தலைமையின் கீழ் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 8 உரையாடல் பங்குதாரர்கள் மற்றும் 11 ஆசியான் உறுப்பு நாடுகளை ADMM-Plus ஒன்றிணைக்கிறது.
இது 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மேலும் முதல் கூட்டம் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று வியட்நாமின் ஹனோயில் நடைபெற்றது.
பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தக் கூட்டம் ஒரு தளத்தை வழங்குகிறது.
கிழக்கே நோக்கிய செயல் கொள்கையின் (Act East Policy) கீழ் ஆசியான் மையத்தன்மை மற்றும் இந்தோ-பசிபிக் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
இளைஞர்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டறிக்கை இக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.