ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) ஆனது, ADT 59 என்ற புதிய குறுகிய கால சாகுபடி கொண்ட நெல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது காவிரி டெல்டா விவசாயிகளிடையே குறுவை சாகுபடி பயிர்களுக்காக வெகுவாக பிரபலமடைந்து வருகிறது.
ADT 59 வகையானது, ADT 37 மற்றும் ASD 16 போன்ற சில வழக்கமான வகைகளுடன் ஒப்பிடும் போது 15 முதல் 20% அதிக மகசூலை அளிக்கிறது.
குறுவை சாகுபடிச் சூழல்களின் கீழ் விவசாயிகள் ஏக்கருக்கு 4,000 கிலோ கிராம் வரை அறுவடை செய்கிறார்கள்.
இந்த வகைக்கு என வழக்கமான ரகங்களுக்குப் பயன்படுத்தும் உர உள்ளீட்டில் 50% மட்டுமே தேவைப்படுகிறது என்பதோடு இது விவசாயிகளுக்கு செலவு குறைந்ததாக அமைகிறது.
ADT 59 ஆனது உப்புத் தன்மை மற்றும் தண்டு துளைப்பான், குலை நோய் மற்றும் பழுப்பு இலைப்புள்ளி போன்ற பூச்சித் தாக்குதல்களுக்கு எதிராக வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது என்பதோடு ஆரோக்கியமானப் பயிர்களின் வளர்ச்சியை இது உறுதி செய்கிறது.
110 முதல் 115 நாட்கள் வரையிலான தானிய முதிர்ச்சி காலத்துடன், இந்த வகையானது குறுவை, நவரை மற்றும் கோடை காலச் சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானதாகும்.