TNPSC Thervupettagam

AEM மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கிடையேயான 16வது கலந்துரையாடல்: பேங்காக்

September 12 , 2019 2115 days 611 0
  • ஆசியான் அமைப்பில் உள்ள பத்து உறுப்பு நாடுகளின் பொருளாதார அமைச்சர்களும் இந்திய வர்த்தகத் துறை அமைச்சரும் சமீபத்தில் AEM (Economic Ministers from ten ASEAN Member States) மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கிடையே 16வது கலந்துரையாடலுக்காக  சமீபத்தில் பேங்காக்கில் (தாய்லாந்து) சந்தித்தனர்.
  • இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவும் ஆசியானும் வர்த்தகத்திற்குச் சாதகமான சூழ்நிலையை மேலும் வலுப்படுத்த பொருள்களின் மீதான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement - FTA) மறு ஆய்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.
  • இருவழி வர்த்தகமானது 2018 ஆம் ஆண்டில் 80.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • இந்தியா ஆசியானின் ஆறாவது பெரிய வர்த்தக பங்களிப்பு நாடாகவும் அந்நிய நேரடி முதலீட்டில் ஆறாவது பெரிய மூல ஆதார நாடாகவும் உள்ளது.
  • இந்தியா மற்றும் ஆசியான் ஆகியவற்றிற்கிடையே பொருட்களின் மீதான  FTA  ஆனது 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்