மத்திய உள்துறை அமைச்சகமானது அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 9 மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களிலிருந்து விமர்சனத்திற்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA - Armed Forces Special Powers Act) திரும்பப் பெறுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குடிமைப் பணியாளர்களுக்கு உதவுவதற்காக ஆயுதப் படைகள் தேவைப்படும் பகுதிகளில் AFPSA பிறப்பிக்கப்பட்டுள்ளது.
AFSPA சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் யூனியன் பிரதேசத்தின் ஆட்சியாளர் அல்லது மாநில அரசு அல்லது மத்திய அரசு ஆகியவற்றினால் “பாதிக்கப்பட்ட இடங்கள்” என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இச்சட்டம் பொருந்தும்.
1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேசம் தனி மாநிலமாக உருவெடுத்துள்ளது. அன்றிலிருந்து AFSPA சட்டமானது அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.
AFSPA
AFSPA ஆனது 1942 ஆம் ஆண்டின் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் அவசரநிலைச் சட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்ட பகுதிகளாக” அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ஆயுதப் படைகள் செயல்படுவதற்கு முழு அதிகாரங்களை அளிக்கக்கூடிய இந்தச் சட்டமானது இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டதாகும்.
AFSPA சட்டங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.
REGION
STATUS
Armed Forces Special Powers (Assam and Manipur) Act, 1958 (Extended to all 7 North East states later)
Tripura, Meghalaya – Withdrawn
Rest of the States - Partially Withdrawn
The Armed Forces (Punjab and Chandigarh) Special Powers Act, 1983
Withdrawn in 1997
The Armed Forces (Jammu and Kashmir) Special Powers Act, 1990