TNPSC Thervupettagam
May 7 , 2024 12 days 136 0
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது 'Aging Well In Asia' என்ற ஒரு புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு நிலையை அடைந்துள்ளன.
  • வங்காளதேசம், இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், சுகாதார வசதிக்கான அணுகல் நன்கு இல்லாதவர்களில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள், ஏழ்மை நிலையின் கடைசி இரண்டு மட்டத்தில் உள்ளனர்.
  • வளர்ந்து வரும் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்து 1.2 பில்லியனாக அல்லது மொத்த மக்கள் தொகையில் கால் பங்காக இருக்கும்.
  • வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் 21% என்ற குறைந்த சுகாதாரக் காப்பீட்டுப் பரவல் கொண்ட இந்தியாவுடன் மற்ற நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
  • அதே நேரத்தில், இந்தப் பொருளாதாரங்கள் முதியவர்களிடமிருந்து கூடுதல் உற்பத்தித் திறன் வடிவத்தில் "வெள்ளி ஈவினை - பணியில் ஈடுபட்டுள்ள பிரிவினரின் பங்கினை" பெறுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளன.
  • இது பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைச் சராசரியாக 0.9% உயர்த்தக் கூடும்.
  • அடித்தட்டு மக்களுக்கு இலவச மருத்துவச் சேவையை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களானது அது தொடங்கப்பட்டதில் இருந்து சுகாதாரக் காப்பீட்டுப் பரவலை மேம்படுத்தியுள்ளது.
  • இதை மேலும் விரிவுபடுத்துவது நிலைமையை மேம்படுத்துவதோடு 60 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பொருளாதாரத்திற்கு அதிகப் பங்கினை ஆற்றச் செய்யும்.
  • நிதி ரீதியில் தயாராக உள்ள முதியோர்கள் (ஓய்வு பெற்ற 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் உள்ளவர்கள்) ஜப்பானில் 86% ஆகவும் இந்தியாவில் 73% ஆகவும் உள்ளனர்.
  • ஆனால் இது சீனாவில் 64% ஆகவும், கொரியக் குடியரசில் 58% ஆகவும் சற்று குறைவாக உள்ளது.
  • இந்தியாவில் வயது முதிர்ந்த பெண்களின் ஆயுட்காலம் 6.4 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து கஜகஸ்தான்; ஜார்ஜியா; மற்றும் ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளில் வயது முதிர்ந்த பெண்களின் ஆயுட்காலம் 4.6 ஆண்டுகள் ஆக அதிகரிக்கும்.
  • வயது முதிர்ந்த ஆண்களின் ஆயுட்காலம் ஆர்மீனியாவில் 6.1 ஆண்டுகள் ஆகவும், அதைத் தொடர்ந்து இந்தியாவில் 5.7 ஆண்டுகள் ஆகவும் மற்றும் ஜார்ஜியாவில் 5.2 ஆண்டுகள் ஆகவும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்