டுபோன்ட் டி நெமோர்ஸ் என்ற (பொதுவாக டுபோன்ட் என அழைக்கப்படுகின்றது) ஒரு அமெரிக்க நிறுவனமானது இந்திய அரசின் AGNIi (புதிய இந்தியாவின் கண்டுபிடிப்புகளின் விரைவான வளர்ச்சி) முன்னெடுப்புடன் இணைந்துள்ளது.
AGNIi என்பது இந்திய அரசின் நாடு தழுவிய ஒரு முயற்சியாகும்.
இது தொழிற் துறை முழுவதும் கண்டுபிடிப்பாளர்களை இணைப்பதன் மூலம் புத்தாக்கத்தின் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக, தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையும் புதுமையான தீர்வுகளை வணிகமயமாக்குவதற்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
AGNIi என்பது ஒரு நிதி வழங்கும் நிறுவனம் அல்ல. மேலும் இது கண்டுபிடிப்பாளர்களுக்கு நேரடியான நிதியுவியை அளிக்காது.