TNPSC Thervupettagam

AgriEnIcs திட்டம்

October 14 , 2025 14 hrs 0 min 20 0
  • மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) ஆனது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மற்றும் தொடர்பு அமைப்புகள் (AgriEnIcs) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயன்பாடு, செயல் விளக்கம் மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • கொல்கத்தாவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) ஆனது அதன் முதன்மை நிறுவனமாக இந்தத் திட்டத்தினை செயல்படுத்துகிறது.
  • இதில் பங்கேற்கும் நிறுவனங்களில் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறை பங்குதார அமைப்புகள் அடங்கும்.
  • மாற்றப்பட்ட அல்லது தொடங்கப்பட்ட ஐந்து தொழில்நுட்பங்களும் இந்த AgriEnIcs திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு சோதிக்கப் பட்டன.
  • இந்த முன்னெடுப்பானது, விரிவுபடுத்தக் கூடிய, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, உணர்வுக் கருவி அடிப்படையிலான வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் மூலம் ஆத்மநிர்பர் பாரதத்தினை (தன்னிறைவு கொண்ட இந்தியா) ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்