AI-செயல்படுத்தப்பட்ட தொலைதூர மின்ணனு வாக்களிப்பு அமைப்பு
February 22 , 2026 12 hrs 0 min 36 0
புது தில்லியில் நடைபெற்ற இந்தியா AI தாக்க உச்சி மாநாட்டில் பீகார் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) -செயல்படுத்தப்பட்ட தொலைதூர மின்ணனு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்தியது.
இந்த அமைப்பை பீகார் மாநில தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) உருவாக்கியது.
“e-Voting SECBHR” என்ற திறன்பேசி செயலி, ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் மூலம் தொலைதூர வாக்களிப்பை செயல்படுத்துகிறது.
வாக்காளர் சரிபார்ப்பில் ஒற்றைக் கடவுச்சொல் (OTP) அங்கீகாரம், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகாரம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) தரவுத் தளத்துடன் பொருத்துதல் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை மறைகுறியாக்கம், உயிர் நிலை கண்டறிதல், தொடர் சங்கிலி அடிப்படையிலான சேமிப்பு மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை சோதனை (VVPAT) ஆகியவை அடங்கும்.
இந்த முறை முதன்முதலில் 2025 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பயன்படுத்தப் பட்டது என்பதோடு எதிர்கால சட்டமன்றத் தேர்தல்களுக்கும் இது பரிசீலிக்கப் படலாம்.