இந்திய மொழிகள், கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் குறித்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை மதிப்பிடுவதற்காக வேண்டி IndQA என்ற ஓர் அளவுருவினை OpenAI அறிமுகப்படுத்தியது.
இதில் வங்காளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், பஞ்சாபி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் உள்ளடக்கப்படும்.
கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு, கலை மற்றும் கலாச்சாரம், அன்றாட வாழ்க்கை, உணவு மற்றும் சமையல் கலை, வரலாறு, சட்டம் மற்றும் நெறிமுறைகள், இலக்கியம் மற்றும் மொழியியல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சமயம் மற்றும் ஆன்மீகம், மற்றும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு போன்ற தலைப்புகளில் IndQA கவனம் செலுத்துகிறது.
இந்திய மொழிகள் மற்றும் கலாச்சார தலைப்புகளில் AI செயல்திறனைக் கண்காணிக்க OpenAI ஆனது IndQA தரநிலையைப் பயன்படுத்துகிறது என்பதோடுஇது காலப்போக்கில் ஏற்படும் முன்னேற்றத்தைக் குறிப்பிடுவதோடு, வளர்ச்சிக்கான ஒரு தளத்தினை அங்கீகரிக்கிறது.