டெல்லி முதல்வர் சரோஜினி நகரில் CM ஸ்ரீ பள்ளியைத் திறந்து வைத்தார் என்ற நிலையில்இது இந்தியாவின் முதல் AI மூலம் வழி நடத்தப்படும் ஒரு விரிவான கல்வி மாதிரியைக் குறிக்கிறது.
டெல்லி முழுவதும் 75 முதல்வர் ஸ்ரீ பள்ளி திட்டங்களுக்கு அரசு அடிக்கல் நாட்டியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 என்பதைப் பின்பற்றும் இந்த முன்முயற்சி தொழில் நுட்பம் சார்ந்த, உயர்தர பொதுக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்தப் பள்ளிகள் நவீன உள்கட்டமைப்பு, AI-இயக்கப்பட்ட மீத்திறன் வகுப்பறைகள் மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட கல்விக்கான டிஜிட்டல் கற்றல் கருவிகளை வழங்கும்.